அனுமதியின்றி எருதுவிடும் விழா; 50 பேர் காயம் - 100 பேர் மீது வழக்கு

விழாவின் போது எருதுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அனுமதியின்றி எருதுவிடும் விழா; 50 பேர் காயம் - 100 பேர் மீது வழக்கு
Published on

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த கொளத்தூர் கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் எருதுவிடும் விழா நடத்தப்படுகிறது. அதன்படி இன்று கொளத்தூர் கிராமத்தில் எருது விடும் விழா களைகட்டியது. இதில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

இந்த விழாவின் போது எருதுகள் முட்டியதில் 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் எருதுவிடும் விழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அனுமதியின்றி எருதுவிடும் விழா நடத்தியதற்காக போலீசார் 100 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com