காளை விடும் திருவிழா

கம்மவான்பேட்டை கிராமத்தில் காளை விடும் திருவிழா நடந்தது.
காளை விடும் திருவிழா
Published on

கண்ணமங்கலம்

கண்ணமங்கலத்தில் இருந்து ஆற்காடு செல்லும் ரோட்டில் உள்ள ராணுவப்பேட்டை என்ற கம்மவான்பேட்டை கிராமத்தில் இன்று 55-ம் ஆண்டு காளை விடும் திருவிழா நடந்தது.

இதில் பங்கேற்க பல்வேறு ஊர்களில் இருந்து 115 காளைகள் கொண்டு வரப்பட்டு பஜனை கோவில் தெருவில் வாடிவாசல் வழியாக ஓட விடப்பட்டது.

இதில் வேகமாக ஓடி முதலிடம் பெற்ற காளை உள்பட 55 காளைகளுக்கு ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டது. பரிசுகளை பெரியதனம் தவமணி, பிரதீப், விஸ்வநாதன், ஊராட்சி மன்ற தலைவர் கவிதாமுருகன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயலட்சுமி ஏழுமலை, துணை தலைவர் லோகலட்சுமி குமரன் ஆகியோர் வழங்கினர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, வேலூர் தாலுகா இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

மேலும் விழாவை வேலூர் தாசில்தார் செந்தில்குமார், கணியம்பாடி வருவாய் ஆய்வாளர் சந்தியா, கம்மவான்பேட்டை கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com