

மும்பை,
விவசாயத்திற்கு வாழ்நாள் முழுவதும் உழைக்கும் காளைகளுக்கும், பசுக்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக மராட்டியத்தில் ஆண்டுதோறும் 'பைல் போலா' திருவிழா வெகுவிமரிசை யாக நடைபெறுவது வழக்கம். குறிப்பாக விதர்பா பகுதியில் இந்த பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
அன்றைய தினம் நிஜ காளைகளை வைத்து வழிபட முடியாதவர்கள். களிமண்ணால் செய்யப்பட்ட காளை சிலைகளுக்கு பொட்டு வைத்து மாலை அணிவித்து பூஜை செய்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் 10, 11-ந் தேதிகளில் இந்த திருவிழா நடைபெறுகிறது.
விழாவை விவசாயிகள் வரவேற்க காத்திருக்கிறார்கள். திருவிழா நெருங்கும் நிலையில் சத்தாரா மாவட்டம் காரத் உள்ளிட்ட பல பகுதிகளில் காளை மாடு சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கண்களை கவரும் வகையில் கலைஞர்கள் காளை சிலைகளை வடிவமைத்து வருகிறார்கள்.