மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்

மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்.
மதுரை விமான நிலையத்தில் சென்னை மாநகராட்சி அதிகாரி பையில் சிக்கிய தோட்டாக்கள்
Published on

மதுரை,

சென்னை பெரியார் நகரைச் சேர்ந்தவர் சக்தி மணிகண்டன் (வயது 56). சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவர் திண்டுக்கல்லில் இருந்த தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். மதுரை விமான நிலையத்தில் சக்தி மணிகண்டனின் பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் 4 தோட்டாக்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சக்தி மணிகண்டனை பெருங்குடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சக்தி மணிகண்டன் உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருக்கிறார். வீட்டில் பெட்டியில் இருந்த தோட்டாக்களை தவறுதலாக கொண்டு வந்துவிட்டதாக அவர் போலீசில் தெரிவித்தார். ஆனாலும் பெருங்குடி போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com