

சேலம்,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரெட்டிப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்டத்தைக் காண அருகில் உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் திரண்டு வந்திருந்தனர். காளைகளின் கழுத்தில் கயிற்றை கட்டி, அவற்றின் மீது வண்ணப்பொடிகளை பூசி ஓடவிட்டு எருதாட்டம் நடைபெற்றது.
சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அங்கிருந்த இளைஞர்கள் துரத்திச் சென்று கட்டுப்படுத்தினர். அப்போது காளைகள் முட்டியதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர். மேலும் தடையை மீறி எருதாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.