மாட்டு வண்டி எல்கை பந்தயம்

கோட்டைப்பட்டினம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Published on

மாட்டு வண்டி பந்தயம்

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் அருகே பாக்கம் கிராமத்தில் பெரிய அய்யனார், முனீஸ்வரர் கோவில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

பந்தயத்தை அறந்தாங்கி முன்னாள் எம்.எல்.ஏ. ரெத்தின சபாபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பந்தயத்தில் புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 76 மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

பரிசு

பந்தயம் பெரிய மாடு, சிறிய மாடு என 2 பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு போய்வர 8 கிலோமீட்டர் தூரமும், சின்ன மாட்டு வண்டிக்கு போய்வர 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. பந்தயத்தில் மாட்டு வண்டிகள் எல்கையை நோக்கி சீறிப்பாய்ந்தன.

இதில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாட்டு வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கம் மற்றும் கேடயம் பரிசாக வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை சாலையில் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு களித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com