மாட்டு வண்டி பந்தயம்

மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.
மாட்டு வண்டி பந்தயம்
Published on

அறந்தாங்கி அருகே கூகனூர் கிராமத்தில் சிவராத்திரி விழாவையொட்டி மாட்டு வண்டி எல்கை பந்தயம் நேற்று நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகை, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மாடுகள் பங்கேற்றன. இந்த மாட்டு வண்டி பந்தயம் 3 பிரிவுகளாக நடைபெற்றது. இதில் பெரியமாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகளும், கரிச்சான்மாடு பிரிவில் 22 ஜோடி மாட்டு வண்டிகளும், ஆறு பல் மாடு பிரிவில் 21 ஜோடி மாட்டு வண்டிகளும் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு கோப்பை மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை சாலையின் இருபுறமும் பொதுமக்கள் திரண்டு நின்று பார்த்து ரசித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com