கோவில் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்

சிவகங்கை அருகே கோவில் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது
கோவில் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம்
Published on

சிவகங்கை,

சிவகங்கை அருகே கோவில் விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி பந்தயம்

சிவகங்கை அருகே வெட்டிக்குளம் சோழவந்தான் கிராமத்தில் உள்ள கன்னிமூலகணபதி கோவில் உற்சவ விழாவையொட்டி மாட்டு வண்டி பந்தயம் வெட்டிக்குளம்-உடகுளம் சாலையில் நடைபெற்றது. இதில் மொத்தம் 22 வண்டிகள் கலந்துகொண்டன. பெரியமாட்டு வண்டி பந்தயம், சின்னமாட்டு வண்டி பந்தயம் என இருபிரிவாக நடைபெற்றது. முதலில் நடைபெற்ற பெரியமாட்டு வண்டி பந்தயத்தில் 7 வண்டிகள் கலந்துகொண்டன.

அதில் முதல் பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகாபுரம் விஜயகுமார் மெடிக்கல்ஸ் வண்டியும், 2-வது பரிசை கல்லுப்பட்டி குருந்தடியான் மற்றும் மானாமதுரை யூனியன் துணைத்தலைவர் முத்துச்சாமி வண்டியும், 3-வது பரிசை திருப்பாலை விஷால் மற்றும் என்.டி.பட்டி நல்லு ஆகியோர் வண்டியும் பெற்றது.

பரிசுகள்

பின்னர் நடைபெற்ற சின்னமாட்டு வண்டி பந்தயத்தில் 15 வண்டிகள் கலந்துகொண்டன. இந்த பந்தயம் இருபிரிவாக நடைபெற்றது. முதல் பிரிவில் முதல் பரிசை அலங்காநல்லூர் கல்லனை விஸ்வாரவிச்சந்திரன் வண்டியும், 2-வது பரிசை ஏரியூர் பெத்தாட்சி மற்றும் பரவை சோனைமுத்து வண்டியும், 3-வது பரிசை காஞ்சிரங்கால் வினோத் மற்றும் முருக்கோடை பொன்வீரன் வண்டியும் பெற்றது.

இதை தொடர்ந்து நடந்த 2-வது பிரிவில் முதல் பரிசை ஏரியூர் பெத்தாட்சி மற்றும் கேரளா வி.எம்.பிரதர்ஸ் வண்டியும், 2-வது பரிசை தூத்துக்குடி மாவட்டம் சண்முகாபுரம் விஜயகுமார் மெடிக்கல்ஸ் வண்டியும், 3-வது பரிசை சக்கந்தி பாண்டி மற்றும் கடுக்காபள்ளம் பாலுச்சாமி ஆகியோர் வண்டியும் பெற்றது. இந்த பந்தயத்தில் வெற்றி பெற்ற வண்டிகளின் உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com