பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்

பொங்கல்பண்டிகை வருவதை முன்னிட்டு காளைவிடும் திருவிழாவுக்கு காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போட்டிக்கு தயாராகும் காளைகள்
Published on

அணைக்கட்டு,

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிகவும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம். இதேபோன்று வட மாவட்டங்களில் காளை விடும் திருவிழா புகழ் பெற்றது. இதில், குறிப்பிட்ட இலக்கினை குறைந்த தூரத்தில் கடக்கும் காளைகள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். அதேநேரம், வெற்றி தோல்வி என்பதை கருத்தில் கொள்ளாமல் பலரும் தாங்கள் வளர்த்து வரும் காளைகளை களத்தில் கட்டவிழ்த்து விடுவதை பெருமையாக நினைத்து வருகின்றனர்.

அதோடு வட மாவட்டங்களில் தங்கள் பகுதிகளில் காளை விடும் திருவிழாவை நடத்துவதை பெருமையாக கருதி வருகின்றனர். இதற்காகவே பலரும் காளைகளை தங்கள் வீட்டு பிள்ளைகள் போன்று வளர்த்து வருகின்றனர்.

தயாராகும் காளைகள்

அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு காளை விடும் திருவிழாவுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில் வேலூர் மாவட்டத்தில் காளைகளை உடல் ரீதியாக தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிகொண்டா அருகே உள்ள அனங்காநல்லூர் பாலாற்றில் காளைகளை அதன் உரிமையாளர் தயார்படுத்தி வருகிறார். காளைகள் ஆற்று மணலை கிளறி ஆவேசத்தை வெளிப்படுத்தியது பிரமிப்பாக இருந்தது.

அதேபோன்று மேலரசம்பட்டு, கோவிந்தரெட்டி பாளையம், பள்ளிகொண்டா, வேலங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் காளைகளை தயார்படுத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com