தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்


தூத்துக்குடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள பீடி இலை பண்டல்கள் பறிமுதல்
x

தூத்துக்குடி, திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகள் வழியாக இலங்கைக்கு சட்ட விரோதமாக பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தூத்துக்குடி துறைமுகம் அருகே திரேஸ்புரம் கடற்கரை வழியாக மர்ம நபர்கள் படகு மூலம் பீடி இலை பண்டல்களை கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் இரவு திரேஸ்புரம் கடற்கரைக்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் கடலில் படகுடன் பீடி இலை பண்டல்களை விட்டுவிட்டு தப்பி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து படகு மற்றும் அதில் இருந்த ரூ.60 லட்சம் மதிப்பிலான 43 பண்டல்களில் இருந்த 1,800 கிலோ பீடி இலைகளை போலீசார் பறிமுதல் செய்து, அவற்றை சுங்கத்துறையில் ஒப்படைத்து, இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story