இரும்பாலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

இரும்பாலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இரும்பாலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
Published on

இரும்பாலை

சேலம் இரும்பாலை மோகன் நகரில் இரும்பாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. நேற்று முன்தினம் மர்ம நபர்கள் குடியிருப்புக்குள் புகுந்து சிலரது வீட்டின் கதவுகளை உடைத்துள்ளனர். இதனைக் கண்ட குடியிருப்பு வாசிகள் மர்ம நபர்களை துரத்திப் பிடிக்க முயற்சித்துள்ளனர். மர்ம நபர்கள் அங்கிருந்து வேகமாக தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து அவர்கள் இரும்பாலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது எர்வின் (வயது 51) என்பவரது வீட்டில் கதவு உடைக்கப்பட்டு 30 ஆயிரம் ரூபாய் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. மேலும் அழகு மணி (57) என்பவர் வீட்டில் 3 பவுன் நகையும், 20 ஆயிரம் ரொக்கமும் திருட்டு போய் இருந்தது.

இது தவிர 5 வீடுகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருட முயற்சித்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com