சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு

சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருடப்பட்டது.
சிங்கப்பெருமாள் கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் திருமலைராஜன் (வயது 37), இவர் கடந்த 22-ந்தேதி வீட்டை பூட்டிக் கொண்டு சென்னைக்கு சென்றார்.

பின்னர் கடந்த 4-ந்தேதி மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த உண்டியல் பணம், 2 கியாஸ்சிலிண்டர்கள், பட்டு சேலைகள், வெள்ளி பொருட்கள் போன்றவை திருட்டு போனது தெரிய வந்தது.

இது குறித்து நேற்று முன்தினம் மறைமலைநகர் போலீசில் திருமலைராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com