தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தீக்குளித்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
Published on

ஆலங்குடி அருகே உள்ள வாராப்பூர் கரையாபட்டி பகுதியை சர்ந்தவர் மகேஸ்வரன் (வயது 44), தொழிலாளி. தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த மகேஸ்வரன் கடந்த மாதம் 27-ந் தேதி தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகிய அவரை அப்பகுதி மக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஸ்வரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டிவிடுதி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com