ஈரோட்டில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி

ஈரோட்டில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி
ஈரோட்டில் இருந்து தொலைதூர ஊர்களுக்கு பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் கடும் அவதி
Published on

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால் ஏராளமானவர்கள் வெளியூர்களுக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். ஈரோட்டில் இருந்து வெளியூருக்கு புறப்பட்டு சென்ற அனைத்து பஸ்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதன் காரணமாக நள்ளிரவில் இயக்கப்பட வேண்டி பஸ்கள் பயணிகளை ஏற்றிக்கொண்டு முன்கூட்டியே புறப்பட்டு சென்றன. எனவே இரவு 10 மணிக்கு மேல் பஸ்கள் கிடைக்காமல் பயணிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாக 11 மணிக்கு மேல் கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல் உள்ளிட்ட ஊர்களுக்கு பஸ் கிடைக்காமல் பயணிகள் அவதி அடைந்தனர். பயணிகள் கூட்டம், கூட்டமாக நள்ளிரவில் காத்துக்கொண்டு இருந்தாலும் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் குழந்தைகள் வைத்திருந்தவர்கள், குடும்பத்துடன் வந்திருந்தவர்கள் சிரமப்பட்டார்கள். இதுபோன்ற நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com