

பேட்டை:
நெல்லையில் இருந்து சேரன்மாதேவி நோக்கி நேற்று இரவு 9 மணி அளவில் தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. மணப்படைவீடு பகுதியை சேர்ந்த ஜேசுதாசன் (வயது 47) என்பவர் பஸ்சை ஓட்டிச் சென்றார். நாஞ்சான்குளத்தை சேர்ந்த லாசர் (52) என்பவர் கண்டக்டராக இருந்தார்.
பேட்டை- சேரன்மாதேவி ரோடு பேட்டை போலீஸ் நிலையம் அருகே சென்றபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து அங்குள்ள தபால் அலுவலகத்தின் முன்புறம் மோதியது. இதில் பஸ்சில் முன்பக்கம் அமர்ந்து பயணம் செய்த 10-க்கு மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். மேலும் இந்த விபத்தின் போது 2 மோட்டார் சைக்கிள்களும், தபால் பெட்டியும் சேதம் அடைந்தது. பஸ்சில் காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலமாக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.