பஸ்கள் மோதல்; 2 பேர் காயம்

தக்கலை அருகே பஸ்கள் மோதல், 2 பேர் காயம்
பஸ்கள் மோதல்; 2 பேர் காயம்
Published on

தக்கலை, 

திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ் புறப்பட்டது. அந்த பஸ்சை அனந்தமங்கலம், தெற்குதெருவை சேர்ந்த சதீஸ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். பஸ் புலியூர்குறிச்சி அருகில் வரும்போது பின்னால் வந்த கேரள அரசு பஸ் மோதியது. இதில் தமிழக அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் கேரள அரசு பஸ்சில் பயணம் செய்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மனோன்மணி (வயது 57), நாகர்கோவிலை சேர்ந்த ஷீபா (28) ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக கேரள அரசு பஸ் டிரைவர் எர்ணாகுளம், ஆலுவாவை சேர்ந்த சஜிர் (46) மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com