வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பஸ் கண்டக்டர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பஸ் கண்டக்டர் பலியானார்
வில்லுக்குறி அருகே மோட்டார் சைக்கிள் மோதி பஸ் கண்டக்டர் பலி
Published on

திங்கள்சந்தை:

வில்லுக்குறி அருகே உள்ள காரவிளையை சேர்ந்தவர் நீலகண்ட பிள்ளை (வயது77), ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று முன்தினம் ஆளூர் பகுதியில் உள்ள தனது மருமகன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்ப வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். காரவிளை பகுதியில் சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிள் நீலகண்ட பிள்ளை மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

---

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com