சென்னைவாசிகள் கவனத்திற்கு... பஸ்கள் புறப்படுமிடம் மாற்றம்

மந்தைவெளி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது.
சென்னைவாசிகள் கவனத்திற்கு... பஸ்கள் புறப்படுமிடம் மாற்றம்
Published on

சென்னை,

சென்னை மந்தைவெளி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ்கள் வருகிற 27-ந்தேதி முதல் தற்காலிகமாக இடமாற்றம் செய்யபப்ட்டுள்ளது. அதன்படி, மந்தைவெளி பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பேருந்துகள், மந்தைவெளி ரெயில் நிலையம், பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் லஸ் கார்னரிலிருந்து புறப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தடம் எண் 21, 41D, S17, 49K, S5 பஸ்கள், மந்தைவெளி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும். அதேபோல, தடம் எண் 49F பஸ், பட்டினப்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும். தடம் எண் 12M, 5B பஸ்கள், லஸ் கார்னர் அருகில் இருந்து புறப்பட்டுச் செல்லும். மாதாந்திர பயணச்சீட்டு, முதியோருக்கான கட்டணமில்லா டேக்கன்கள் பட்டினப்பாக்கத்தில் தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com