பஸ்-லாரி மோதல்; 6 பேர் காயம்

திருநாகேஸ்வரத்தில் பஸ்- லாரி மோதிக்கொண்ட விபத்தில் 6 பேர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Published on

பஸ்-லாரி மோதல்

திருநாகேஸ்வரத்தில் கும்பகோணம்- காரைக்கால் மெயின் ரோட்டில் கும்பகோணத்தில் இருந்து காரைக்காலை நோக்கி பயணிகளுடன் புதுச்சேரி போக்குவரத்து கழக பஸ் சென்று கொண்டிருந்தது.

அதேபோல் எதிரே காரைக்காலில் இருந்து கும்பகோணம் நோக்கி சுமை ஏற்றி வந்த லாரியும் நேற்று மாலை நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் பஸ்சின் முன் பக்கம் நசுங்கியது. லாரியின் ஒரு பக்க முன்புறம் சேதமடைந்தது.

6 பேர் காயம்

இந்த விபத்தில் பஸ் டிரைவர் காரைக்கால் சேத்தூர் பகுதியைச் சேர்ந்த சரவணன் (வயது38), கண்டக்டர் புதுச்சேரி திருபுவனம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (47), கூத்தகுடியைச் சேர்ந்த சிவசக்தி (17), காரைக்கால் கணபதி நகரை சேர்ந்த சிராஜ்நிஷா (58), விருதுநகர் சொக்கநாதபுத்தூர் பகுதியை சேர்ந்த சித்ரா (30), குடவாசலை சேர்ந்த ரவி (57) ஆகிய 6 பேரும் காயம் அடைந்தனர்.

உடனடியாக அக்கம், பக்கத்தினர் அங்கு ஓடி வந்து காயம் அடைந்த 6 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து திருநீலக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com