

நெல்லை,
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி வள்ளீயூர் பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்து கொண்டார்.
இதனையடுத்து புதிய பேருந்து சேவையை சபாநாயகர் அப்பாவு மற்றும் நெல்லை எம்.பி. ஞானதிரவியம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். அதோடு அவர்கள் அந்த பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்தனர்.