ஆகஸ்ட் 3ஆம் தேதி பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது - போக்குவரத்துறை சுற்றறிக்கை

ஆகஸ்ட் 3ஆம் தேதி பஸ் ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என்று போக்குவரத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு, மூன்று ஆண்டுக்கு ஒரு முறை, ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்தப்பட்டு, ஊதிய உயர்வு நிர்ணயம் செய்யப்படுகிறது. இதன்படி, 13வது ஊதிய ஒப்பந்தம், 2019 ஆகஸ்ட் மாதத்தில் முடிந்தது. அடுத்து, 14வது ஊதிய ஒப்பந்தம் போட்டிருந்தால், கடந்த மாதம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், கொரோனா தொற்று பாதிப்பு, சட்டசபை தேர்தல், அமைச்சர் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால், ஒப்பந்த பேச்சு முழுவீச்சில் நடைபெறவில்லை.

இதைக் கண்டித்து, தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் அனுப்பியதோடு, ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் ஆகஸ்ட் 3ஆம் தேதி வேலைநிறுத்தம் செய்வதாக சிஐடியூ தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் பணிக்கு வரவில்லை எனில் ஆப்செண்ட் மார்க் செய்யப்பட்டு ஊதியம் பிடிக்கப்படும் என்றும் போக்குவரத்துத்துறை அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com