பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் - சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் இன்று தொடக்கம்

பேருந்து நிறுத்தம் குறித்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.
பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம் - சென்னை மாநகர போக்குவரத்துக்கழக பேருந்துகளில் இன்று தொடக்கம்
Published on

சென்னை,

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில், புவிசார் நவீன தானியங்கி அறிவிப்பான் (GPS) மூலம் 'பேருந்து நிறுத்தம் ஒலி அறிவிப்பு திட்டம்' இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் சென்னை மாநகர பேருந்துகளில் தமிழ், ஆங்கிலத்தில் அடுத்துவரக்கூடிய பேருந்து நிறுத்தம் குறித்து பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பீக்கர்கள் மூலம் பயணிகளுக்கு அறிவிக்கப்படும்.

பேருந்து நிறுத்தத்திற்கு 300 மீட்டருக்கு முன்னதாக குறிப்பிட்ட பேருந்து நிறுத்தத்தின் பெயர் குறித்த தகவல் பேருந்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்திருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com