பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தற்காலிக பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமனம்; பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக தற்காலிக பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.
பஸ் ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தற்காலிக பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் நியமனம்; பஸ்களை இயக்க அரசு நடவடிக்கை
Published on

சென்னை,

அவர்கள் மூலமாக பஸ்களை இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

வேலைநிறுத்தம்

போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குறைந்த எண்ணிக்கையிலேயே அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தனியார் பஸ்களை வரவழைத்து அரசு பஸ் இயக்கப்பட்டு வந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டன.

அப்படி இயக்கப்பட்ட பஸ்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தான் இயக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

தற்காலிக பணியாளர்கள்

எனவே பஸ்களை இயக்குவதற்காக ஓட்டுநர் உரிமம் மற்றும் கண்டக்டர் உரிமம் வைத்திருக்கும் நபர்களை தற்காலிக பணியாளர்களாக தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்து அனைத்து பஸ்களும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் அறிவித்திருந்தார்.

இதனையடுத்து சென்னை பல்லவன் இல்லத்தில் நேற்று தற்காலிக டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியிடங்களுக்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் கலந்து கொண்டவர்களிடம் ஓட்டுநர் உரிமங்களை சரிபார்க்கும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

டிரைவர் பணிக்கு வந்தவர்களை பஸ்களை இயக்க சொல்லி சோதனை நடத்தினர். பின்னர் முறையான ஓட்டுநர் மற்றும் கண்டக்டர் உரிமம் வைத்திருந்தவர்களுக்கும், நன்கு வாகனம் ஓட்டியவர்களுக்கும் உடனடியாக பணி வழங்கப்பட்டு, குறிப்பிட்ட வழித்தடத்தில் பஸ்கள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com