பஸ் ஸ்ட்ரைக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது ஐகோர்ட் அதிரடி உத்தரவு

போக்குவரத்துத் தொழிலாள்கள் வேலை நிறுத்தம் செய்ய சென்னை ஐகோர்ட் விதித்த தடையை நீக்கமுடியாது என அதிரடியாக அறிவித்த ஐகோர்ட் நீதிபதிகள் , தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு செல்ல வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டனர்.#TNBusStrike | #HighCourt
பஸ் ஸ்ட்ரைக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது ஐகோர்ட் அதிரடி உத்தரவு
Published on

சென்னை

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து நாள்களாக போராட்டம் தொடர்வதால் தமிழகம் முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடர்பாக தொழிற்சங்கள் பதில் மனு தாக்கம் செய்தன.

எங்கள் தரப்பு வாதத்தைக் கேட்ட பிறகே இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், வழக்கு விசாரணையின் போது சிஐடியு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதில் மனுவில், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நோட்டீஸ் தந்த பிறகே வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதால் போராட்டம் தாற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது என்று சிஐடியு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழிலாளர்கள் நலனில் அரசு முழுமையாக அக்கறை செலுத்தவில்லை என்றும் தொழிற்சங்கம் சார்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அரசு நம்பிக்கை மோசடி செய்துவிட்டது. வைப்பு நிதி, எல் ஐ. சி-க்காக பிடித்தம் செய்த தொகையை செலுத்தவில்லை. ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வைப்பு நிதி கணக்கில் செலுத்தப்படவில்லை. தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் அளவு ரூ.5 ஆயிரம் கோடி- தொழிலாளர்களின் பணத்தை கொடுக்க அரசு காலதாமதம்- என தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கபட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை நீதிமன்றம் கண்டித்தது. 'இந்த போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளது யார் என்பதை உணர்ந்துள்ளார்களா? இந்த போராட்டத்தால் பொதுமக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 600 ரூபாய் சம்பள உயர்வுக்காக பொதுமக்களை பாதிப்படைய செய்வது சரியா?. பணக்காரர்கள் காரில் செல்கிறார்கள். இந்த போராட்டத்தால் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பாதிக்கப்படவில்லை' என்று தொழிலாளர்களை நீதிமன்றம் கண்டித்தது.

நிலுவைத் தொகை வழங்காததுதான் ஸ்டிரைக் நடத்த காரணமா? என்று தலைமை நீதிபதி இந்திரா கேள்வி எழுப்பியுள்ளார்.

நிலுவைத் தொகை படிப்படியாக வழங்கப்பட்டு வருவதாக அரசு தலைமை வக்கீல் பதில் அளித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தின் பின்னணியில் தி.மு.க உள்ளது அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

ஓய்வூதியம் ஏன் உரிய காலத்தில் வழங்கவில்லை என போக்குவரத்து தொழிலாளர் வழக்கில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வி எழுப்பினார்.

போராடக் கூடாது எனக் கூறவில்லை; திடீர் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்பட்டதால் தடை விதிக்கப்பட்டது.

அரசுப் போக்குவரத்து கலகங்களை கலைத்து விட்டு தனியார் மயமாக்கலாமா? என்றும் தலைமை நீதிபதி தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். போக்குவரத்துத்துறையை அரசால் நடத்த முடியாவிட்டால் தனியார்மயமாக்க வேண்டியதுதானே? என ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார்.

இனி புதிய பேருந்துகளை அறிவிக்கும்போது தனியார் மயமாக்குங்கள் என அவர் உத்தரவிட்டார்.

10 லட்சம் செலுத்தி அப்போலோ செல்ல முடிந்தால் ஏன் அரசு பேருந்தை மக்கள் நம்பியிருக்கிறார்கள்' என்று நீதிமன்றம் அரசை கண்டித்தது.

போராட விதித்த தடையை மாற்றியமைக்க விரும்பவில்லை . தலைமை நீதிபதி அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் நடத்த முடியாது என தலைமை நீதிபதி கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்குகள் வேறு அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டது.

போராட விதித்த தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்புபோக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் - ஐகோர்ட் உத்தரவிட்டது.

#TNBusStrike | #HighCourt | #BusStrike | #TransportWorkers

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com