பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டம்; முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு

பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில் முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. #strike
பேருந்து கட்டண உயர்வு: மாணவர்கள் போராட்டம்; முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு
Published on

ராமநாதபுரம்,

தமிழக அரசு பேருந்து கட்டணத்தினை கடந்த 19ந்தேதி உயர்த்தி அறிவித்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி மாணவ மாணவிகளும் எதிர்ப்பினை தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்தி வந்தனர். பேருந்து கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டமும் நடத்தின.

இதனை தொடர்ந்து பேருந்து கட்டணம் அனைத்து நிலைகளிலும் ரூ.1 குறைக்கப்பட்டது. எனினும், கட்டண உயர்வை முழு அளவில் திரும்ப பெற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில், பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக முதுகுளத்தூர் அரசு கலை கல்லூரியின் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை அடுத்து கல்லூரிக்கு விடுமுறை விடுவது என கல்லூரி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது.

#strike #college #holiday

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com