புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து

புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தினை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார்.
புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து
Published on

காரியாபட்டி, 

காரியாபட்டியிலிருந்து கடமங்குளம் - சத்திரம் புளியங்குளம், மறைக்குளம் ஆகிய கிராமங்களுக்கும், தாமரைக்குளம் வழியாக காரைக்குளம் கிராமத்திற்கும், காரியாபட்டியில் இருந்து திருவளர்நல்லூர் கிராமத்திற்கும் புதிய வழித்தடங்களில் பஸ் தொடக்க விழா காரியாபட்டி பஸ் நிலையத்தில் நடைபெற்றது. அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய வழித்தடங்களில் பஸ்களை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றது முதல் 22 வழித்தடங்களில் பஸ்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரியாபட்டி ஒன்றியத்தில் புதிய வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதால் கிராமபுற மாணவர்கள், ஏழை, எளிய மக்கள் என அனைவரும் பயன்பெறுவர். இவ்வாறு அவர் கூறினார்.

இதில் காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், ஒன்றிய செயலாளர் கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், பேரூராட்சி துணைத்தலைவர் ரூபி சந்தோசம், தோப்பூர் தங்கப்பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் சேகர், சிதம்பரபாரதி, பேரூராட்சி கவுன்சிலர் செல்வராஜ், முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், தீபா, சரஸ்வதி, நாகஜோதி, பேரூர் கழக துணைச்செயலாளர் கல்யாணி, மாவட்ட பிரதிநிதி சங்கர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com