அரியலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு போலீஸ் விசாரணை

அரியலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசா விசாத்து வருகின்றனா.
அரியலூரில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு போலீஸ் விசாரணை
Published on

ரிஷிவந்தியம், 

சங்கராபுரத்தில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி நேற்று மாலை அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சை திருக்கோவிலூர் அடுத்த வீரட்டகரம் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் சேகர் என்பவர் ஓட்டினார்.

பஸ், அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில், நிற்காமல் சற்று தூரத்தில் சென்று நின்றது. இதற்கிடையே பஸ்நிற்காமல் செல்வதாக நினைத்து மர்ம நபர் பஸ்சின் பின்பகுதியில் கற்களை வீசி, கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com