

சென்னை,
கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகள் வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக சென்று வந்தன. சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக மதுரவாயல் பைபாஸ் வழியாக பேருந்துகள் இதுவரை இயக்கப்பட்டு வந்தன. இதனால் தாம்பரத்தில் இருந்து வெளியூர் செல்வோருக்கு சற்று இடையூறு ஏற்பட்டது.
இந்நிலையில், பொதுமக்களின் வசதிக்கேற்ப இனி வடபழனி, அசோக்பில்லர், தாம்பரம் வழியாக கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகள் இயக்கப்படும்.