ஆயுத பூஜை விடுமுறையால் வியாபாரம் பாதிப்பு: கோயம்பேடு சந்தையில் குப்பையில் கொட்டப்பட்ட காய்கறிகள்

விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறிகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாமல் தேங்கின.
ஆயுத பூஜை விடுமுறையால் வியாபாரம் பாதிப்பு: கோயம்பேடு சந்தையில் குப்பையில் கொட்டப்பட்ட காய்கறிகள்
Published on: 

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு வியாபாரம் மந்தமடைந்ததால், விற்பனையாகாமல் தேங்கிய காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்டன.

கோயம்பேடு சந்தை

சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர்.

குப்பையில் காய்கறிகள்...

இந்த நிலையில், ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு சந்தையில் வியாபாரம் மந்தமடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட காய்கறிகள் எதிர்பார்த்த அளவுக்கு விற்பனையாகாமல் தேங்கின. நீண்ட நேரமாக விற்பனையாகாமல் இருந்த காய்கறிகள் வீணாகும் நிலை ஏற்பட்டதால், அவற்றை வியாபாரிகள் குப்பையில் கொட்டினர்.

இதனால் சந்தைப் பகுதியில் காய்கறிகள் குவிந்து காணப்பட்டன. விற்பனையாகாமல் காய்கறிகள் வீணானதால் வியாபாரிகளுக்கு இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆயுத பூஜை விடுமுறையால் கோயம்பேடு சந்தையில் வியாபாரம் பாதிக்கப்பட்டு, விற்பனையாகாத காய்கறிகள் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com