சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்கிறது

சென்னை மாநகராட்சியில் தொழில் வரி 35 சதவீதம் வரை உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் தொழில் வரி உயர்கிறது
Published on

சென்னை,

சென்னை மாநகராட்சியில் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில்வரி விகிதங்களை திருத்தி அமைக்கலாம் என்ற விதி உள்ளதால் தொழில் வரியை 35 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 2018ல் தொழில்வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 35% உயர்த்த நேற்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதன்படி, மாத வருமானம் ரூ.21,000-க்குள் இருந்தால் தொழில்வரி வசூலிக்கப்படாது. ரூ.21,000 முதல் ரூ.30,000 வரைவருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.135ல் இருந்து ரூ.180ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.30,000 முதல் ரூ.45,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.315ல் இருந்து ரூ.430 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ரூ.45,000 முதல் ரூ.60,000 வரை வருமானம் உள்ளவர்களுக்கான வரி ரூ.690ல் இருந்து ரூ930 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருத்தியமைக்கப்பட்ட தொழில்வரியின் படி, அரையாண்டுக்கான வரி ரூ.45-ல் இருந்து ரூ.240 வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வரியை வருமானதாரர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com