இடைத்தேர்தல்: அ.தி.மு.க.வில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க
Published on

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக செங்கல்பட்டு கிழக்கு, மேற்கு, வடசென்னை வடக்கு(கிழக்கு), (மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), தென்சென்னை வடக்கு(கிழக்கு),(மேற்கு), தெற்கு(கிழக்கு), (மேற்கு), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்தியம், கடலூர் கிழக்கு, வடக்கு, தெற்கு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி கிழக்கு, சென்னை புறநகர், காஞ்சிபுரம், திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு, கிருஷ்ணகிரி மேற்கு, தர்மபுரி கிழக்கு, மேற்கு, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக திருப்பூர் மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, சேலம் மாநகர், புறநகர், நாமக்கல், ஈரோடு மாநகர், புறநகர் கிழக்கு, மேற்கு, கோவை மாநகர், புறநகர் வடக்கு, தெற்கு, மத்தியம், நீலகிரி, திருச்சி மாநகர், திருச்சி புறநகர் வடக்கு, தெற்கு, கிழக்கு, கரூர், திருவாரூர், திண்டுக்கல் கிழக்கு, மேற்கு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்.

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி, சிறப்பான முறையில் தேர்தல் பணிகளை ஆற்றி, அ.தி.மு.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்திட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com