

சென்னை
தமிழக அரசின் தலைமைச்செயலாளர் எம்.சாய் குமார் வெளியிட்டுள்ள அர சாணையில் கூறியிருப்பதாவது:-செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் (தனி) சட்டமன்ற தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி, இந்த 2 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ள பகுதிகளில் அக்டோபர் 6-ந் தேதி பொது விடு முறை அளிக்கப்படுகிறது.
மேலும், செங்கல்பட்டு, திருப்பூர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்து வந்தாலும், மதுராந்தகம் (தனி) அல்லது தாராபுரம் (தனி) தொகுதிகளில் வாக்காளர்களாக பதிவு செய்துள்ள அனைத்து ஊழியர்க ளுக்கும் அக்டோபர் 6-ந் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க வேண்டும். இந்த 2 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் அரசு கட்டுப் பாட்டில் உள்ள நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவ னங்கள் அன்றைய தினம் மூடப்பட்டு இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.