ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன் - டிடிவி தினகரன்

ஒரு சில அமைச்சர்களின் சதியால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன் என ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ தினகரன் கூறினார்.#TTVDhinakaran
ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன் - டிடிவி தினகரன்
Published on

சென்னை

பேரவையில் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் டிடிவி தினகரன் வெளிநடப்பு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னை துணைப் பொதுச்செயலாளராக பரிந்துரை செய்ததே அமைச்சர் தங்கமணி தான். சில அமைச்சர்களின் சதியால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டேன்

எங்களால் கட்சிப் பதவியை பெற்றவர், தற்போது குடும்ப ஆட்சியை எதிர்ப்பதாக கூறுகிறார். குறுக்கு வழியில் இரட்டை இலை சின்னம் பெற்றும், ஆர்.கே.நகரில் தோல்வியடைந்துள்ளனர். தனக்கு முதலமைச்சர் பதவி இல்லை என்பதற்காக தியானம் இருந்தவர்தான் ஓ.பன்னீர்செல்வம்.

தமிழக அரசு தண்ணீரை சேமிக்காத காரணத்தால் டெல்டா பகுதிகளில் பயிர்கள் கருகிய நிலையில் உள்ளது .

ஒருசில அமைச்சர்களின் சதியால் கட்சியிலிருந்து ஒதுக்கிவைக்கப்பட்டேன். எம்.எல்.ஏ.க்களின் ஊதிய உயர்வு தேவையற்றது.எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காகவே ஊதிய உயர்வு அளிக்கிறது அதிமுக அரசு.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை நாளை மறுநாள் சந்திக்க உள்ளேன். என கூறினார்.

#RKNagar | #TTVDhinakaran | #TNAssembly

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com