

திருப்பூர்,
திருப்பூர்-பல்லடம் சாலையில் தென்னம்பாளையம் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு திருப்பூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்னைக்காக காய்கறிகள் கொண்டுவரப்படுகிறது. தற்போது, வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால், காய்கறிகள் விளைச்சல் குறைந்து, விலை அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு முட் டைக்கோஸ் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வரத்து அதிகரிப்பால் 40 கிலோ எடை கொண்ட மூட்டை ரூ.400 முதல் ரூ.500 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்டது.
மேலும், முட்டைக்கோஸ் விற்பனையும் மந்தமாக காணப்பட்டது. இதனால், விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கவலை அடைந்தனர். குறிப்பாக, மற்ற காய்கறிகளின் வரத்து குறைந்ததால், காய்கறிகளின் விலை மூட்டைக்கு ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரித்து காணப்பட்டது.