மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு

வாணியம்பாடியில் மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மயங்கி விழுந்த ஓட்டல் தொழிலாளி சிகிச்சை பலனின்றி சாவு
Published on

வாணியம்பாடி பெரியப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் அக்பர்பாஷா (வயது 43). வாணியம்பாடியை அடுத்த நெக்குந்தி சோதனைச்சாவடி அருகில் உள்ள ஓட்டலில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 15-ந் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு மயங்கிய அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கும், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com