

ராமநாதபுரம்,
உலக கோப்பை கால்பந்து திருவிழாவையொட்டி ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக அதனை கொண்டாடும் விதத்திலும் இன்றைய இளைஞர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை தூண்டும் விதத்திலும் ஆளுயர உலகக் கால்பந்து கோப்பையை வடிவமைத்து உள்ளனர். இது சுமார் 60 கிலோ சர்க்கரை மற்றும் 260 முட்டைகளை பயன்படுத்தி 5 அடி உயரத்தில் உலக கோப்பை தத்ரூபமாக கேக் ஆக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை பேக்கரி உரிமையாளர் வெங்கடசுப்பு தலைமையில் கேக் வடிவமைப்பு கலைஞர்கள் பல மணி நேரத்தை செலவழித்து உருவாக்கி உள்ளனர். இந்த உலக கோப்பை கால்பந்து கோப்பை கேக்கை ரசிகர்கள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்.