வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி

வாக்கு எண்ணிக்கை மையங்களில் சி.சி.டி.வி. இருப்பதால் முறைகேடுகளுக்கு வாய்ப்பில்லை என நீதிபதி குறிப்பிட்டார்.
வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள் நியமனத்தை எதிர்த்து திரிணாமுல் காங்கிரஸ் மனு - கொல்கத்தா ஐகோர்ட்டு தள்ளுபடி
Published on

கொல்கத்தா,

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள வாக்கு என்னும் மையங்களில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களை மேற்பார்வையாளர்களாக நியமித்தது பாரபட்சமானது என்று கூறி கொல்கத்தா ஐகோர்ட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி கிருஷ்ணாராவ் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வாதிடப்பட்டது. இதையடுத்து நீதிபதி, வாக்கு எண்ணிக்கை மையங்களில் சி.சி.டி.வி. இருப்பதால் முறைக்கேடுகளுக்கு வாய்ப்பில்லை என குறிப்பிட்டார்.

மேலும், மேற்பார்வையாளர்களை நியமிப்பது தேர்தல் ஆணையத்தின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்திய நீதிபதி, முறைகேடுகள் ஏதேனும் ஏற்பட்டால் அதனை தேர்தல் வழக்காக தொடரலாம் என தெரிவித்து, திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com