ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு; அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்

தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசின் கொள்கைகள் குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.
ரீல்ஸ் மூலம் முதலீட்டாளர்களுக்கு அழைப்பு; அமைச்சர் கீர்த்தனாவின் வீடியோ வைரல்
Published on

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட ரீல்ஸ் பதிவில், ‘தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம். கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார். நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது.

பிரச்சினைகளை என்னிடமும், முதல் அமைச்சரிடமும் நேரடியாக கொண்டு வரலாம் என்று உறுதியளிக்கிறோம். முதல் அமைச்சர் விஜயின் தொலைநோக்குமிக்க தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் புதுமைகளின் மையமாகத் திகழச் செய்ய நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.எதிர்காலம் இங்கேயே உள்ளது. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள். இவ்வாறு கீர்த்தனா கூறியுள்ளார். தொழில் துறை அமைச்சரின் இந்த ரீல்ஸ் வீடியோவிற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைத்தளங்களில் விவாதம் அதிகரித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com