டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கூட்டம்: தமிழக தலைவர்களுக்கு அழைப்பு தமிழிசை சவுந்தரராஜன் தகவல்

டெல்லியில் இன்று நடைபெறும் பா.ஜனதா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் எந்தெந்த தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று பா.ஜனதா கூட்டணி கூட்டம்: தமிழக தலைவர்களுக்கு அழைப்பு தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
Published on

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியின் நல்ல திட்டங்கள் தொடர வேண்டும். நாங்கள் சொன்னது போன்று, வேண்டும் மோடி. மீண்டும் மோடி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பில் தவறு நடந்திருந்தால் பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெறும் இடங்கள் அதிகரிக்குமே தவிர குறையாது. மத்தியில் நிச்சயம் பா.ஜ.க. கூட்டணி தான் ஆட்சி அமைக்க போகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com