சத்தியமங்கலத்துக்கு வந்த பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பக்தர்கள் வரவேற்பு

பக்தர்கள் வரவேற்பு
சத்தியமங்கலத்துக்கு வந்த பண்ணாரி மாரியம்மன் சப்பரம் பக்தர்கள் வரவேற்பு
Published on

சத்தியமங்கலத்துக்கு பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வந்தடைந்தது. அப்போது பக்தர்கள் அம்மனை வரவேற்று தரிசனம் செய்தனர்.

அம்மன் வீதி உலா

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழா கடந்த 20-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து 21-ந் தேதி இரவு பண்ணாரி மாரியம்மன் மற்றும் சருகு மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வீதி உலாவாக புறப்பட்டனர்.

அன்றில் இருந்து அம்மனின் சப்பரம் சிக்கரசம்பாளையம், இக்கரை நெகமம், இக்கரை நெகமம் புதூர், வெள்ளியம்பாளையம், கொத்தமங்கலம், தொட்டம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், அக்கரை தத்தப்பள்ளி, உத்தண்டியூர், தாண்டாம்பாளையம், கெஞ்சனூர், திருவள்ளுவர் நகர், சத்தியமங்கலம் அருகே உள்ள அய்யன்சாலை ஆகிய கிராமங்களில் வீதி உலாவாக சென்றது.

சத்தியமங்கலத்தை வந்தடைந்தது

இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு சத்தியமங்கலத்துக்கு வந்தடைந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் அம்மனை வரவேற்று தரிசனம் செய்தனர். பின்னர் சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டு மாரியம்மன் கோவிலில் அம்மனின் சப்பரம் தங்க வைக்கப்பட்டது. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) பண்ணாரி மாரியம்மன் சப்பரம் வீதி உலா நடைபெறுகிறது.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com