கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கானஇரண்டாம் கட்ட பதிவு முகாம் தொடக்கம்இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கானஇரண்டாம் கட்ட பதிவு முகாம் தொடக்கம்இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு
Published on

சேலம்

சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கியது. இதுவரை 4.2 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

மகளிர் உரிமை தொகை

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் அடுத்த மாதம் (சப்டம்பர்) 15-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின்படி குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணிகள் முதற்கட்டமாக கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இந்த பணியில் 1,614 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 11 லட்சம் ரேஷன்கார்டுதாரர்கள் உள்ளனர். இதில், தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு விண்ணப்ப பதிவு நடந்து வந்தது.

இரண்டாம் கட்ட முகாம்

இந்த முதற்கட்ட முகாமில் மாவட்டத்தில் நகர பகுதிகளில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 854 பேர், கிராமப்புறங்களில் 2 லட்சத்து 54 ஆயிரத்து 803 பேர் என மொத்தம் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பெண்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள விவரங்கள் அனைத்தும், முகாமில் உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள செயலியில் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான இரண்டாம் கட்ட பதிவு செய்யும் முகாம் நேற்று தொடங்கி உள்ளது. மாவட்டம் முழுவதும் 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடந்து வருகிறது. அனைத்து பகுதியிலும் பெண்கள் ஆர்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பங்கள் வாங்கி அதனை உடனே பூர்த்தி செய்து கொடுக்கின்றனர்.

இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடக்கிறது எனவும், இதுவரை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பம் செய்யாத பெண்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com