எருமப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

எருமப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்
Published on

எருமப்பட்டி:

எருமப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொது மருத்துவம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யோக மணிகண்டன், பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எருமப்பட்டி ஒன்றியக்குழு தலைவர் சங்கீதா சுகுமார் தலைமை தாங்கினார். வட்டார டாக்டர் லலிதா தலைமையில் டாக்டர்கள் காண்டீபன், முத்துக்குமார், சித்த மருத்துவர் சத்யா ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.

முகாமில் எருமப்பட்டி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சி செயலாளர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள், டேங்க் ஆபரேட்டர்கள், அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டு ரத்த பரிசோதனை, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை, தொழுநோய் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் பல் சிகிச்சை, காசநோய், டெங்கு காய்ச்சல் குறித்த கண்காட்சியும் வைக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com