மக்கள் குறைதீர்க்கும் முகாம்

மக்கள் குறைதீர்க்கும் முகாம்
Published on

காங்கயம் சென்னிமலை சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் காங்கயம் போலீஸ் நிலையம் சார்பில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் தலைமை வகித்தார். போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் காமராஜ், சப்- இன்ஸ்பெக்டர்கள் சந்திரன், கார்த்தி மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டு ஆன்லைன் மோசடியில் இருந்து எப்படி தற்காத்து கொள்வது, சாலை விதிகளை கடைபிடிப்பது, விபத்துகளை தடுப்பது போன்ற விழிப்புணர்வு கருத்துகளை எடுத்து கூறினர். பின்னர் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 70-க் கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கை மனுக்களை முன்வைத்தனர். இதில் 30-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com