மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்

பாபநாசத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது.
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம்
Published on

பாபநாசம்:

தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் பாபநாசம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இந்த முகாமை, எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டைகள், காது கேட்கும் கருவிகள் மற்றும் தொழில் கடன் பெறுவதற்கான ஆணைகள் வழங்கினார். இதில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், தி.மு.க. தஞ்சை வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் கோவி. அய்யாராசு, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கோ. தாமரைச்செல்வன், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய தலைவர் சுமதி கண்ணதாசன், பேரூராட்சி மன்றத் தலைவர் பூங்குழலி கபிலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com