வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 1,500 மனுக்கள்

பாபநாசம் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 1,500 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 1,500 மனுக்கள்
Published on

பாபநாசம் தாலுகாவில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 1,500 மனுக்கள் பெறப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி, பாபநாசம் தாலுகாவில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 2 நாட்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் செய்ய சிறப்பு முகாம்கள் நடந்தன. இந்த முகாம்களில் கலந்து கொண்ட வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம், ஆதார் எண் இணைப்பது ஆகியவற்றிற்கான படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர், வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரி ஆகியோரிடம் வழங்கினர்.

1,500 மனுக்கள்

முகாம்களை பாபநாசம் தாசில்தார் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் விநாயகம் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 1,500-க்கும் மேற்பட்ட விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டதாக வருவாய்த் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com