பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு

பாவூர்சத்திரம் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு நடந்தது.
பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக தேர்வு
Published on

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லெட்சுமிதாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் கம்ப்யூட்டர் என்ஜினீயரிங், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் ஆண்ட் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் இறுதி ஆண்டு பயிலும் மாணவ -மாணவிகளுக்கு வேலைவாய்ப்புக்கான வளாக தேர்வு நடைபெற்றது. சுயர் சாப்ட் சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ரகுராமன் மாணவர்களை நேர்முக தேர்வு செய்தார். கலந்து கொண்ட 50 மாணவர்களில் தேர்வான 10 மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

மாணவர்களை கல்லூரி தாளாளர் வி.காளியப்பன், ஆலோசகர் பாலசுப்பிரமணியன், முதல்வர் ரமேஷ் உள்பட பலர் பாராட்டினார்கள்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அலுவலர் மணிராஜ் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் செய்து இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com