சென்னை ஐ.ஐ.டி.யில் வளாக நேர்காணல்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 19 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

சென்னை ஐ.ஐ.டி.யில் வளாக நேர்காணல்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 19 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.
சென்னை ஐ.ஐ.டி.யில் வளாக நேர்காணல்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 19 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு
Published on

சென்னை,

சென்னை ஐ.ஐ.டி.யில் 2021-22-ம் கல்வியாண்டுக்கான வளாக நேர்காணலுக்கு 1,498 மாணவ-மாணவிகள் பல்வேறு படிப்புகளில் பதிவு செய்து இருந்தனர்.

இந்த நிலையில் முதல்கட்ட வளாக நேர்காணல் நேற்று தொடங்கியது. நேர்காணலின் முதல் அமர்வின் தொடக்கத்தில் 34 நிறுவனங்கள் 176 வேலைவாய்ப்புகளை மாணவர்களுக்கு வழங்கின. மொத்தமாக முதல் அமர்வு முடிவில் 407 வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன. இது கடந்த ஆண்டுகளை விட அதிகம் என்று சென்னை ஐ.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

முதல் அமர்வில் மைக்ரோசாப்ட், டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, பெயின் அண்ட் கம்பெனி, கோல்டுமேன் சாக்ஸ், குவால்காம், பாஸ்டன் கன்சல்ட்டிங் குரூப், ஜெ.பி. மோர்கன் சேஸ் அன் கோ மற்றும் மெக்கின்சி போன்ற நிறுவனங்கள் பங்கேற்றன. இவற்றில் மைக்ரோசாப்ட் அதிகபட்சமாக 19 வேலைவாய்ப்புகளையும், அதற்கடுத்தபடியாக டெக்சஸ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தலா 15 வேலைவாய்ப்புகளையும், கோல்டுமேன் சாக்ஸ் மற்றும் பெயின் அண்ட் கம்பெனி தலா 10 வேலைவாய்ப்புகளையும் வழங்கியுள்ளன.

வருகிற 10-ந் தேதி வரை இந்த முதல்கட்ட வளாக நேர்காணல் நடைபெற இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com