கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை

கல்லூரி மாணவி கடத்தலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி கடத்தலா? போலீசார் விசாரணை
Published on

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி தெற்கு தெருவை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகள் அனுஷா (வயது 18). இவர் கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு இளங்கலை பொருளியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்தநிலையில், கோடங்குடி கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் கலை நிகழ்ச்சியை பார்த்துவிட்டு வருவதாக கூறி சென்றவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தா.பழூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவியை யாரேனும் கடத்தி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com