டேராடூன் தேசிய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்

தேர்விற்கு தகுதியுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
டேராடூன் தேசிய ராணுவ கல்லூரியில் சேர்வதற்கான தகுதி தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்
Published on

நெல்லை,

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் இந்திய தேசிய ராணுவக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சேர்ந்து படிப்ப தற்கான தகுதி தேர்வு 7.6.2026 அன்று நடக்க உள்ளது. இந்த தேர்விற்கு தகுதியுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் சிறார்கள் குறைந்த பட்சம் 7-ம் வகுப்பு படித்து கொண்டு இருப்பவர்களாகவோ அல் லது 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவோ இருக்க வேண்டும்.

1.1.2027 அன்று 11% வயது நிரம்பியவர்களாகவோ அல்லது 13 வயதிற்கு உட்பட்டவர்களாகவோ இருக்க வேண்டும். தேர்வு ஆங்கிலம், கணிதம், பொதுஅறிவு போன்ற பாடங்களில் நடத் தப்படும். இந்த தேர்வு தமிழகத்தில் சென்னை நகரில் நடை பெற உள்ளது. எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட் டுமே நேர்முகத்தேர்வு நடைபெறும்.

இந்த தேர்வுக்கான விண்ணப்ப படிவம், தகவல் தொகுப்பேடு மற்றும் முந்தைய தேர்விற்கான வினாத்தாள் தொகுப்பை கமாண்டன்ட் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரி, கர்ஹிகாண்ட் டேராடூன், உத்திரகாண்ட் 248003 என்ற முகவரியில் இணைய வழி மூலம் ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியின் இணைய வழியான www.rimc.edu.in மூலமாக பொது பிரிவினர் ரூ.600-ம், பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர் ரூ.555-ம் செலுத்தி பெற் றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வா ணையம், பூங்காநகர் சென்னை என்ற முகவரிக்கு 5.4.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். இந்த தகவலை கலெக்டர் சுகுமார் தெரிவித்துள் ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com