ஆவின் பொருட்களை ஆர்டர் செய்து பெறலாம் - ஆவின் நிர்வாகம்

ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உப பொருட்களை ஆர்டர் செய்து பெறலாம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவின் பொருட்களை ஆர்டர் செய்து பெறலாம் - ஆவின் நிர்வாகம்
Published on

சென்னை,

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், வரும் மே 3 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கின் காரணமாக மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர பிற காரணங்களுக்கு வெளியில் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் ஆர்டர் செய்தால் ஆவின் பால் சார்ந்த உப பொருள்கள் வீடு தேடி வரும் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆவின் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'உணவு விநியோகம் செய்துவரும் சொமாட்டோ மற்றும் டன்சோ நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கே ஆவின் பால் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய் உள்ளிட்ட உபபொருட்களையும் பொதுமக்கள் ஆர்டர் செய்து பெறலாம். தற்போது ஆவின் முகவர்களுக்கான நியமன வைப்புத்தொகை ரூ.1,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com